சென்னை: தீபாவளியின் போது தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் காரமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்ய வேண்டும்.
அத்தகைய பதிவு இல்லாமல் விற்பனை செய்வது குற்றமாகும். விதிகளை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருட்கள் சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் கலப்படமற்ற முறையில் தரமான பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும்.

உணவுப் பொருளின் பெயர், உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அறிந்தால், அவர்கள் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.