சென்னை : பொறியியல் படிப்பிற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கவுள்ளது. கட் ஆஃப் நிர்ணயம் செய்யும் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் சென்டம் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாம்.
இதனால் டாப் ரேஞ்சில் 1.25 – 1.75, ஆவரேஜ் முதல் இறுதி வரை 1.75 – 15 வரை கட் ஆஃப் குறையும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். 160 170-க்கு மேல் எடுப்பவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு கட் ஆஃப் மார்க்குகள் குறைவதால் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் எனவும் கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.