திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் கொட்டப்பட்ட 5 டன் தர்பூசணி. ஏன் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தர்பூசணி கொடுத்து மீன் வளர்க்கும் இந்த அதிசய விவசாயியை பாருங்கள். வழக்கமாக, ஏரிகளை டெண்டர் எடுத்து மீன் வளர்ப்பவர்கள் இறைச்சிக் கழிவுகளை மீனுக்கு உணவாகக் கொடுத்து வளர்ப்பார்கள்.
ஆனால், அவை ஏரி நீரை கெடுப்பதால், தர்பூசணி, கீரை, சோளம் ஆகியவற்றை உணவாகக் கொடுத்து மீன் வளர்ப்பதாக கூறுகிறார் ஐயப்பன். பலே ஐடியாதான். ஆனால் கட்டுப்படி ஆகுமா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும் இயற்கை பொருட்களை கொடுப்பதால் மீன்கள் நன்கு வளரும் அதன் மூலம் லாபம் பார்த்து விடலாம் என ஐயப்பன் நினைக்கிறாரோ என்னவோ.