சென்னை : திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான மருத்துவ சிகிச்சை எடுப்பதுதான் மிகவும் சிறந்தது. ஆனால் இது அனைவராலும் முடியுமா?எதிர்பாராத, அவசர கால மருத்துவச் செலவை எல்லாராலும் ஏற்க முடியுமா? எந்த விதமான சிகிச்சை என்றாலும் அனைவராலும் அதற்கான செலவு செய்ய முடியுமா என்ற கேள்விக்கு முடியாது என்பதே பதிலாக இருக்கும்.
எனவே ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது மிக அவசியம்தான். மாத ஊதியம் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பிறரும் மருத்துவக் காப்பீடு பெறலாம்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுதோறும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்குமே? எல்ஐசி பாலிசி போன்று முதிர்வு நிலையில் பணம் கிடைப்பது இல்லையே? மருத்துவ சிகிச்சை இல்லையே? தேவைப்படும் சேமிப்பிலிருந்து மருத்துவ சிகிச்சை நிலையில் செலவுசெய்து கொள்ளலாமே என நினைப்பது மிகவும் தவறான சிந்தனை ஆகும். தேவையில்லாமல் எத்தனையோ செலவுகள் செய்யும் பொழுது மிக மிக முக்கியமான இந்த மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு செலவுத் தொகையை மனம் நிறைந்து செய்ய வேண்டும்.
மருத்துவக் காப்பீடு எடுக்காமல் தவறான கருத்து உள்ளோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு பிரபல வாக்கியம் உள்ளது.சொற்றொடர் உங்களுக்கு தேவைப்படாத நிலையில் மருத்துவக் காப்பீடு பாலிசியை எடுங்கள்– ஏனெனில் தேவைப்படும்போது உங்களுக்கு உடனடியாக மருத்துவக் காப்பீட்டை எடுத்து பலன் அடைய முடியாது. நாம்தான் மருத்துவக் காப்பீட்டை எடுத்து விட்டோமே-மருத்துவச் செலவு ஏற்பட்டால் கவலை இல்லை என அதுகுறித்து அக்கறை செலுத்தாமல் இருப்பது நல்லது அல்ல. மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்தவுடன், ஆண்டுதோறும் கெடு தேதிக்கு சில நாள்கள் முன்பு அதை புதுப்பிப்பது, மருத்துவக் காப்பீட்டுக்கு உரிய அடையாள அட்டையைப் பராமரிப்பது, மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கும் மருத்துவமனைக்கும் இடையே பாலமாகச் செயல்படும் டிபிஏ எனப்படும் நிறுவனத்தின் (தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர்) தொலைபேசி எண், அதன் அமைவிடம் குறித்த தகவல்களைப் பராமரிப்பது போன்ற திட்டமிடல்களும் அவசியம்.
மாத ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியின் ஓராண்டு தொடர் வைப்பு திட்டத்தில் (ரிகரிங் டெபாசிட்) செலுத்தி வந்தால், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை காப்பீட்டு பிரீமியம் தொகையை கஷ்டமின்றி செலுத்த முடியும். ஒவ்வோர் ஆண்டும் குறித்த கெடு தேதிக்குள் காப்பீட்டைப் புதுப்பிப்பதை தவறாமல் செய்துவிட வேண்டும். ஆயுள் காப்பீடு போல, மருத்துவக் காப்பீட்டில் கெடு தீர்ந்த பிறகு பிரீமியம் செலுத்த நீண்ட கால அவகாசம் கிடையாது. கெடு தேதிக்குப் பிறகு பிரீமியம் தொகையைச் செலுத்த ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.
அந்த ஒரு வாரத்துக்குள்ளாவது பாலிசியை புதுப்பிக்கத் தவறினால் பலன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். செல்போன், கடிதம் மூலம் உங்களுக்கு நினைவூட்டல் தவறாமல் கிடைக்கும்படி காப்பீட்டு நிறுவனத்துடன் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் யாருக்கு எந்த நோய் எப்பொழுது எங்கு ஏற்படும் என்பது தெரியாத நிலை. எனவே நம்மை நம்பி உள்ள குடும்பத்திற்கு நாம் தான் அஸ்திவாரம் என்பதை உணர்ந்து மருத்துவ காப்பீட்டை எடுத்து வைத்துக் கொள்வது எப்போதும் சிறந்தது. மேலும் இதுதொடர்பாக நிபுணரிடம் தகவல் தெரிந்து கொள்ள: 9600999515