சென்னை: ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களை வெறுப்படைய செய்கிறதாம். ஆண்கள் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? பெண்களிடம் உள்ள எந்த விஷயங்களெல்லாம் ஆண்களுக்கு பிடிப்பதில்லை என்று இந்த பதிவில் பார்ப்போம்.
பாசாங்கை ரசித்த ஆண்கள் இப்போது இல்லை. முதலில் நீங்கள் மற்றவர்களைப் போல பாசாங்கு செய்வது தெரியாமல் அவர் உங்களை ரசிப்பதாக நினைப்பீங்கள். ஆனால், ஒரு கட்டத்தில் தெரியவரும்போது உங்கள் உறவு உடையவும் வாய்ப்பு இருக்கிறது.
ஆண்களுக்கு புகழ்ச்சி பிடிக்காது என்பது தவறான கருத்து. ஆண்கள் புகழ்ந்ததும் சந்தோசம் அடைவதை வெளிப்படுத்த மாட்டார்கள். அதை நிராகரிப்பது போல பாசாங்கு செய்வார்கள். ஆனால், சின்ன சின்ன புகழ்ச்சி, பாராட்டு ஆண்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும்.
ஆண்களுக்கு அழகான தோற்றமுடைய பெண்களை மிகவும் பிடிக்கும், அவர்களுடன் சுற்ற நினைப்பார்கள், ஆனால் உங்கள் உறவு மேலும் வளர அது ஒரு தடையாகும். அவர்கள் வாழ்க்கைத்துணை அவர்களைவிட அழகாக இருப்பதில் ஆண்களுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நம்ப முடியவில்லையா? அப்படிதான் ஆய்வுகள் சொல்கிறது.
தற்போது தடிமனான உதடுகள் ஆண்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறார்கள் பெண்கள். ஆனால், அவர்கள் இது என்ன வாத்து முகம்போல இருக்கிறதே என்றுதான் எண்ணுவார்கள். இயற்கையான தோற்றமே மிகவும் அழகாக இருக்கும் என்பது நினைவில் இருக்கட்டும்.
நீங்கள் ஒரு தவறு செய்து விட்டால், ஏன் செய்தீர்கள், எதற்கு செய்தீர்கள் என்று உங்கள் தரப்பை விளக்கி நியாயப்படுத்த முற்படாதீர்கள். அது அவர்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. அதைப்பற்றிப் பேசாமல் இருந்துவிட்டாலே அது மறந்து விடும்.
பெண்களும், ஆண்களும் வெவ்வேறு விதங்களில் பிரச்சனைகளை கையாளுவார்கள். பெண்களுக்கு ஒரு பிரச்சனையைப் பற்றி பேசினால் போதும். ஆனால் ஆண்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நினைப்பார்கள். எனவே, நீங்கள் உங்கள் பிரச்சனைகளை சொல்ல ஆரம்பிக்கும்போதே, உங்களுக்கு உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளத்தான் அவர் தேவை என்பதையும், தீர்வு வேண்டாம் என்றும் கூறிவிடுங்க.
ஆண்களுக்கு உங்கள் குரல் குழந்தை போல இருந்தால் மிகவும் பிடிக்கும் என்று நினைப்பீர்கள். மாறாக, அது அவர்களுக்கு எரிச்சல்தான் உண்டாக்கும். நீங்கள் நீங்களாகவே இருங்கள், அவர் அதை விரும்புவார்.