தஞசாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். சுகாதார ஆய்வாளர் அன்பரசன் புகையிலை தடுப்பு சட்டங்கள் குறித்தும், அரிமா சங்க முன்னாள் தலைவர் சுப்ரமணியன்,செயலாளர் ஜோசப், அரிமா சங்க செயலாளர் சேகர், பொருளாளர் அன்பழகன், பொறுப்பாளர் ரமேஷ், என்ஜிஓ ராமநாதன், தமிழ்நாடு எலட்ரீசியன் அசோசியேசன் தலைவர் சுரேஷ், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வில் அமைப்புகளின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.
பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கணேசன் உள்ளிட்ட பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணி மஸ்தூர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.