அறந்தாங்கி: அறந்தாங்கி அரசு கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். கல்லூரிக் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து. சண்முகசுந்தரம் உள்ளிட்ட பேராசிரியர்கள், கல்லூரிக் கண்காணிப்பாளர் பா.மகாராஜன் உள்ளிட்ட அலுவலகப்பணியாளர்கள், மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர்.
கல்லூரி முதல்வர் அவர்கள் சார்பாக, உலகத்தாய்மொழி நாள் உறுதிமொழியை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை வாசித்தளிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.