சென்னை: சென்னை அருகே பருத்திப்பட்டியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வாங்கிய பர்கரில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.
அய்யப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லலிதா தனது இரண்டு மகள்களுடன் பர்கரை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பாதி சாப்பிட்ட நிலையில், பர்கரில் புழுக்கள் நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, புகாரை விசாரித்த போலீசார், பர்கரில் புழுக்கள் இருப்பதாக பொறுப்பாளர் ஒப்புக்கொண்டார். பின்னர், புழுக்கள் உள்ள பர்கரை சாப்பிட்ட இரண்டு சிறுமிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல போலீசார் அறிவுறுத்தினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.