சென்னை: தமிழ்நாட்டில் 15-ம் தேதி ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல தாழ்வு நிலை சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் 7 முதல் 11 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஜனவரி 15-ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உறைபனி நிலவுகிறது.