சென்னை: நுரையீரல் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்க யோகாசனங்கள் செய்யுங்கள்.
எந்த ஒரு தொற்றுக் கிருமியும் நம்மை தாக்காமல் வாழ வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் ராஜ உறுப்புகளில் ஒன்றான நுரையீரலை நன்றாக வைத்திருந்தால் நலமாக வாழலாம். எந்த ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்யாதவர்கள் கீழ்குறிப்பிட்ட யோகாசனங்களை தினமும் பயிலுங்கள். நுரையீரல் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும்.
உடலில் பல பிரச்சினைகள் உள்ளவர்கள், சற்று வயதானவர்கள், யோகாசனத்திற்கு பதிலாக அடுத்து வரும் முத்திரை, தியானம், மூச்சுப்பயிற்சிகளை செய்யுங்கள். புஜங்காசனம் விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை பக்கவாட்டில் இதயம் பக்கத்தில் வைக்கவும்.
மெதுவாக மூச்சை இழுத்து கொண்டு இடுப்பிற்கு மேல் உடலை பின் புறமாக வளைக்கவும். பத்து வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையை நோக்கி வரவும். இது போல் மூன்று முறைகள் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும். நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கும்.
நல்ல காற்றை உள் வாங்கும். அசுத்தக் காற்றை வெளியேற்றும்.
நுரையீரலில் உள்ள காற்று முடிச்சுகளில் அசுத்தக் காற்றுகள், கிருமிகள் தங்காது. முதுகுத்தண்டு திடப்படும். உசட்டாசனம் முதலில் வஜ்ராசனமிடவும். முட்டியில் நிற்கவும். ஒவ்வொரு கையினால் கணுக்காலை படத்தில் உள்ளது போல் பிடிக்கவும். கழுத்தை பின்னால் வளைத்து மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
பின் மெதுவாக கைகளை எடுத்து நேராக வரவும். இரண்டு முறைகள் செய்யவும். நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும், சளி, ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும். காய்ச்சல் வராது.