சென்னை: சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் (சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட) மினி பேருந்துகளை இயக்க புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க புதிய அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 72 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர், குறிப்பிட்ட வழித்தட விவரங்களைக் குறிப்பிட்டு 10.03.2025-க்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.