சென்னை: வெற்றிலைக்கு சிறப்பான ஒரு குணம் உண்டு. அதாவது குரல் கம்முதல், தலைபாரம், மண்டையில் நீரேற்றம், நுரையீரல் சளி, இருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது வெற்றிலை.
பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிலைச்சாறு கொடுக்கலாம். வெற்றிலைச்சாறு காரச்சுவை கொண்டது என்பதால் 2 அல்லது 3 சொட்டு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து கொடுக்கலாம்.வெற்றிலையை இன்னொரு முறையிலும் குழந்தைகளுக்கு மருந்தாகத் தரலாம்.
வெற்றிலை போலவே குழந்தைகளுக்கு துளசி, ஓமவல்லி, முருங்கை இலை, வேப்பிலை, நுணா இலை, ஆடாதோடா இலை போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இவற்றில் நுணா இலை போன்று பெரிய இலையாக இருந்தால் ஒன்று எடுத்துக்கொள்ளலாம். துளசி, வேப்பிலை போன்றவற்றை மூன்று இலைகள் எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்குத் தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தைக் கொடுக்கலாம். அதனால் குழந்தைகளுக்கு சளி பிடிக்காது. வயிற்றில் மாந்த உணர்வு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, செரிமான கோளாறுகளும் நீங்கும்.