தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து யுவராஜா திடீரென ராஜினாமா செய்ததால் ஜி.கே.வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதில் யுவராஜாவுக்கு உடன்பாடு இல்லை என்றும், இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்றும் தெரிய வந்தது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் மூன்று லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் ஜி.கே.வாசன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என யுவராஜா கடிதம் கொடுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் தான் கட்சியை விட்டு விலகவில்லை என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்த யுவராஜா கட்சியில் நீடிப்பாரா? அல்லது அதிமுக அல்லது திமுகவில் இணைகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.