சென்னை: தொலைத்தொடர்பு துறையில் 9வது ஆண்டு நிறைவை கொண்டாடும் ரிலையன்ஸ் ஜியோ, இன்று 500 மில்லியன் பயனர்களைத் தாண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை எட்டியுள்ளது. இது, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை குறித்து ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்:
“ஜியோவை நம்பிய 500 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு நன்றி. ஒரே நாட்டுக்குள் இத்தகைய அளவை எட்டியது, ஜியோ இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியதைக் காட்டுகிறது. சிறந்த தொழில்நுட்பத்தை எளிதில் அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் நோக்கம்” என்று அவர் கூறினார்.
ஜியோ சலுகைகள் – ஆண்டு விழா சிறப்பு
- செப்டம்பர் 5 முதல் 7 வரை, அனைத்து 5G ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும், தற்போதைய பிளான் இல்லாமல் இலவச 5G டேட்டா.
- ரூ.39 டேட்டா ஆட்-ஆனை எடுக்கும் 4G பயனர்களுக்கு அன்லிமிடெட் 4G டேட்டா.
- செப் 5 – அக்டோ 5 வரை ரூ.349 பிளான் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு:
- அன்லிமிடெட் 5G டேட்டா
- ஜியோ கோல்ட் வழியாக 2% கூடுதல் டிஜிட்டல் தங்கம்
- ஹாட்ஸ்டார் 1 மாத சந்தா உள்ளிட்ட பல சலுகைகள்.
- ரூ.1200 பிளான் எடுப்பவர்களுக்கு 2 மாத ஜியோஹோம் சேவை இணைப்பு.
- ரூ.349 பிளானை 12 மாதங்கள் தொடர்ச்சியாக ரீசார்ஜ் செய்தால், 13வது மாதம் அதே பிளான் இலவசம்.
ஜியோவின் இந்த அறிவிப்புகள், அதன் பயனர்களுக்கு மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகின்றன.