பொங்கல் பண்டிகை காலத்தில் பெரும்பாலானோர் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர், அதில் குறிப்பாக நல்ல கேமரா குவாலிட்டி கொண்ட போன்கள் இன்று அனைவரின் தேர்வாக உள்ளன. இந்த நிலையில், ரூ.10,000 விலைக்குள் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இதோ உங்களுக்கு வழங்குகிறோம்.
விவோ ஒய்18டி ஸ்மார்ட்போனில் 50 MP + 0.08 MP மெயின் கேமரா உள்ளது, மற்றும் 8 MP முன்பக்க கேமராவுடன் செல்ஃபிகள் எடுத்துக்கொள்ள முடிகிறது. இந்த போனின் முக்கிய அம்சங்கள் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 5000 mAh பேட்டரி. Unisoc Octa-core செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை ரூ.9,499 ஆகும்.
சியோமி ரெட்மி A4 ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இந்த கேமரா f/1.8 லென்சுடன் கூடிய Auxillary லென்ஸையும் கொண்டுள்ளது. 6.88 இன்ச் 120Hz IPS LCD டிஸ்பிளே, Snapdragon 4s Gen 2 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 5160 mAh பேட்டரி கொண்ட இந்த போன், ரூ.9,498க்கு கிடைக்கும்.
மோட்டோரோலா ஜி35 ஸ்மார்ட்போனில் 50MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா உள்ளது. இந்த போனில் 6.72 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 5000 mAh பேட்டரி தரப்படுகிறது. இந்த போன் பிளிப்கார்ட்டில் ரூ.9,999க்கு கிடைக்கும்.
இந்த அனைத்து போன்களும் நல்ல கேமரா திறனுடன் கூடியவை, மற்றும் குறைந்த விலையில் உயர்தர அனுபவத்தை வழங்குகின்றன.