இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒவ்வொருவரது கையிலும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. அந்த ஸ்மார்ட்போன்களில் இணைய சேவையும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பள்ளிகளில் தொடங்கி அலுவலகங்கள் வரை, வீடுகளில் இருந்தே அரசு சேவைகள் பயன்படுத்தும் அளவுக்கு இணையம் நமது வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த சூழலில், இணையத் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சீனா செய்துள்ளது.

பெய்ஜிங் அருகிலுள்ள ஹெபெய் மாகாணத்தில் அமைந்துள்ள சியோங்கான் நியூ பகுதி, சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக வலுத்து வருகிறது. இப்பகுதியில், ஹூவாய் மற்றும் சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து, உலகத்தில் முதன்முறையாக 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளன.
இணைய சேவை ஆரம்பத்தில் 2ஜி மூலம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 3ஜி, 4ஜி என தொடர்ந்த வளர்ச்சியில் தற்போது 5ஜி பல நாடுகளில் தளர்வாக செயல்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் 5ஜி சேவையை ஆளுமை செய்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் சீனாவின் 10ஜி தொழில்நுட்பம், உலகத் தரத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
10ஜி நெட்வொர்க்கில் பதிவிறக்க வேகம் 9834 எம்.பி.பி.எஸ். என பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது இந்தியாவில் கூட 5ஜி சேவையின் முழு வேகம் எட்டாத ஒரு அளவாகும். மேலும் பதிவேற்ற வேகமாக 1008 எம்.பி.பி.எஸ். எனப் பதிவாகியுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், இந்த நெட்வொர்க் கடந்த எல்லா இணையத் தொழில்நுட்பங்களையும் மிஞ்சியதாகக் கூறப்படுகிறது.
இந்த வளர்ச்சி சீனாவின் டிஜிட்டல் துறையின் வலிமையை நிரூபிக்கும் வகையிலும், எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு விதைத்த விதையாகவும் பார்க்கப்படுகிறது. உலக நாடுகளின் கவனமும் தற்போது சீனாவின் இந்த முயற்சிக்கு திரும்பியுள்ளது.
சீனாவின் இந்த செயல், தகவல் தொழில்நுட்பத்தில் அவர்களின் முதலிடத்தை வலியுறுத்துகிறது. மேலும் இது உலக நாடுகளுக்கிடையில் இணையத் துறையில் ஒரு புதிய போட்டியை உருவாக்கக்கூடியதாக உள்ளது.
5ஜி சேவை நடைமுறைக்கு வருவதற்கே பெரும்பாலான நாடுகள் காலம் எடுத்துள்ள நிலையில், சீனாவின் 10ஜி செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, இனி இணைய சேவையில் வேகம் மற்றும் திறனை நாடுகள் எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்து சிந்திக்க வைக்கும்.
சர்வதேச அளவில் டிஜிட்டல் பரிணாமத்தை உருவாக்கும் இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் கல்வி, தொழில், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என்பது நிச்சயம். இணையத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்த சீனாவின் இந்த முயற்சி, தொழில்நுட்ப உலகத்தில் வரலாற்றில் நினைவுகொள்ளப்படும் என்றே கூறலாம்.