சென்னை: ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம். உலகளவில் செல்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களை தயாரித்து விற்பனை செய்யும் சீன தேசிய நிறுவனங்களில் ஒப்போவும் ஒன்றாகும். பொதுவாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கும். அதன் காரணமாக ஒப்போ நிறுவனம் அவ்வப்போது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில் தற்போது ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. ஒப்போவின் ‘ஏ’ சீரிஸ் போன் வெளியாகியுள்ளது.
Oppo A3 – சிறப்பு அம்சங்கள்
6.67 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
MediaTek Demoncity 6300 சிப்செட்
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
பிரதான கேமரா 50 மெகாபிக்சல்கள் மற்றும் AI அம்சங்களுடன் உள்ளது
இதில் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது
6ஜிபி ரேம்
128 ஜிபி சேமிப்பு
5,100mAh பேட்டரி
இந்த போனில் 45 வாட்ஸ் சார்ஜர் உள்ளது
இந்த போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது
USB வகை-C 2.0
5G நெட்வொர்க்
இரட்டை சிம் கார்டு
இந்த போனின் விலை ரூ.15,999