வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்வதில் மிகவும் பிரபலமான நிறுவனமான Haier தற்போது கிளாஸ் டோர் ரெஃப்ரிஜிரேட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டைரக்ட் கூல் கிளாஸ் டோர் ரெஃப்ரிஜிரேட்டர்கள் அற்புதமான ப்ரீமியம் கிளாஸ் டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ரெஃப்ரிஜிரேட்டர்கள் 185 லிட்டர்கள் மற்றும் 190 லிட்டர்கள் ஆகிய இரண்டு அளவுகளில் இந்தியா முழுவதும் உள்ள ரீடைல் சேனல்கள் மூலமாக கிடைக்கின்றன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பீனிக்ஸ் ரெஃப்ரிஜிரேட்டர்கள் 21,000 முதல் கிடைக்கின்றன. மேலும் இதனை அனைத்து முன்னணி ரீடைல் ஸ்டோர்களிலும் வாங்கிக் கொள்ளலாம். இந்த ரெஃப்ரிஜிரேட்டர்களுக்கு Haier இந்தியா 10 வருட கம்ப்ரஸர் வாரண்டியை வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் கஸ்டமர்கள் 180 லிட்டர் ரெஃப்ரிஜிரேட்டருக்கு 1 வருட பிராடக்ட் வாரண்டியும், 190 லிட்டர் ரெஃப்ரிஜிரேட்டருக்கு 2 வருட பிராடக்ட் வாரண்டியும் பெற்றுக் கொள்ளலாம்.
பீனிக்ஸ் ரெஃப்ரிஜிரேட்டர்களின் விரைவான கூலிங்கிற்காக டைமண்ட் எட்ஜ் ஃப்ரீசிங் தொழில்நுட்பம் (DEFT) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வோல்டேஜ் ஏற்ற இறக்கங்களின்போதும், தடையில்லாத செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக ஸ்டெபிலைசர் இல்லாத செயல்பாடு கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நல்ல உறுதியான கண்ணாடி செல்ஃபுகள், விரைவான ஐஸ் உற்பத்தி மற்றும் கிரிஸ்டல் கிளியர் ஐஸ் கியூப்ஸ் போன்றவை வழங்கப்படுகின்றன.
ரெஃப்ரிஜிரேட்டரில் உள்ள அனைத்து கேஸ்கட்டுகளையும் எளிமையாக அகற்றி சுத்தம் செய்து பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஃப்ரிட்ஜ் எப்பொழுதும் சுகாதாரமாகவும், ஃப்ரெஷ் ஆகவும் இருக்கும். 2, 3 மற்றும் 5 ஸ்டார் BEE ரேட்டிங் கொண்ட இந்த பீனிக்ஸ் ரெஃப்ரிஜிரேட்டர் குறைந்த மின்சாரத்தில் அதிகப்படியான செயல் திறனை வழங்குகிறது. இது குறித்து பேசிய Haier அப்ளையன்ஸ் இந்தியா தலைவர் சதீஷ்,“ப்ரீமியம் மற்றும் அனைவரையும் ஈர்க்கும்படி வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க நினைக்கும் கஸ்டமர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் இந்த டைரக்ட் கூல் சிங்கிள் டோர் ரெஃப்ரிஜிரேட்டர்களை வெளியிட்டுள்ளோம்.
கஸ்டமர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களுடைய முதல் நோக்கமாக இருக்கும். இந்த ரெஃப்ரிஜிரேட்டர்கள் அற்புதமான ஸ்டைல் மற்றும் செயல்பாட்டை வெளிப்படுத்தும். அதே வேளையில் இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.