சென்னை: லாவா யுவா 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம். லாவா இன்டர்நேஷனல் என்பது இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சர்வதேச மின்னணு நிறுவனம்.
இந்நிறுவனம் லாவா என்ற பெயரில் மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றை தயாரிக்கிறது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் லாவா யுவா 4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு பிரிவு பயனர்களை மனதில் கொண்டு இது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும்.
சிறப்பு அம்சங்கள்:
Unisoc T606 செயலி
6.56-இன்ச் பஞ்ச்-ஹோல் HD டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
4ஜிபி ரேம்
50 மெகாபிக்சல் பின்புற கேமரா
USB Type-C போர்ட்
64 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு
8 மெகாபிக்சல் முன் கேமரா
5,000mAh பேட்டரி
10-வாட் சார்ஜர்
இந்த போன் மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது
இந்த போனின் விலை ரூ. 6,999.