ஜூலை 4ம் தேதி அடுத்த தலைமுறை ஃப்ளிப் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை மோட்ரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8s 3-ம் தலைமுறை பிராசஸரைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள் அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது. கொஞ்ச நாட்களாகவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸைன் மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதிகளை இணையத்தில் மோட்ரோலா நிறுவனம் வெளியிட்டு வருவதால் எதிர்பார்ப்பு கூடுதலாகியுள்ளது.
நத்திங் (Nothing) நிறுவனம் மிட் ரேஞ்ச் பிரிவில் அதிகபடியான வசதிகளோடு முதல்முறையாக இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. ஜூலை 8ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகப்போகிறது. மீடியாடெட் டைமன்சிட்டி 730 மற்றும் டூயல் கேமரா செட்டப்புடன் வரும் CMF Phone 1, வழக்கமான நத்திங் ஸ்மார்ட்போனை விட முற்றிலும் வேறுவிதமாக உள்ளது. எனினும் இந்த போன் நத்திங் ஆபரேட்டிங் சிஸ்டத்தில்தான் இயங்கப் போகிறது. ரெட்மீ நிறுவனத்தின் இந்த புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன், பல மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களோடு ஜூலை 9-ம் தேதி அறிமுகமாகவுள்ளது.
Redmi 13 5G ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4-ம் தலைமுறை 2 SoC-ஐ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5,000mAh திறனுள்ள பேட்டரி, அதற்கு உதவியாக 18W ஃபாஸ்ட் சார்ஜர் ஆகியவையும் இந்த போனில் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் வேறு என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜூலை 10-ம் தேதி இந்த புதிய ஸ்மார்ட்போனின் அன்பேக் நிகழ்ச்சி நடைபெறும் என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சாம்சங்கின் மடக்கும் வசதி கொண்ட புதிய தலைமுறை Galaxy Z Fold ஸ்மார்ட்போனின் டிஸைன், வசதிகள், சிறப்பம்சங்கள் ஆகியவை அப்கிரேடு செய்யப்பட்ட Galaxy Z Flip 6 ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்படும். இவற்றோடு சேர்த்து கேலக்ஸி வாட்ச் 7 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 3 ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தவுள்ளது சாம்சங்.
ரெனோ 12 சீரிஸ் ஸ்மார்ட்போனை உலகளவில் ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால் இதன் அறிமுக தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 12ம் தேதி அறிமுகமாகும் என இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் அட்வான்ஸ் செயற்கை நுண்ணறிவு வசதிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமரா செட்டப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.