இந்தியாவின் நம்பிக்கைக்குரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, தனது புதிய மைக்ரோ ஹேட்ச்பேக் மாடலான “செர்வோ”வை 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இதன் அறிமுகம் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது இந்திய சாலைகளில் இது சோதனை ஓட்டத்தில் பலமுறை பார்க்கப்பட்டிருப்பதால், இதன் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

செர்வோவில் 0.8 லிட்டர் K-சீரிஸ் இன்ஜின் பொருத்தப்படும் என நம்பப்படுகிறது. இது 47 bhp சக்தியும், 68 nm டார்க்கும் வழங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன்களிலும் இதை சந்தைப்படுத்த வாய்ப்பு உள்ளது. மைலேஜ் விஷயத்தில், பெட்ரோல் மாடல் 22-24 கிமீ/லிட்டர் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CNG வேரியண்டில், இது 32 கிமீ/கிலோ வரை தரக்கூடும் என நிறுவனம் கூறியுள்ளது.
வெளிப்புற தோற்றத்தில் செர்வோ ஒரு ஸ்போர்ட்டியான வடிவமைப்பை பெற்றுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட்கள், குரோம் கிரில், LED DRLகள், ஸ்விம்மிங் விண்ட்ஸ்கிரீன், ஃப்ளேர்டு வீல் ஆர்ச், 13 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் மவுண்டட் ஸ்பாய்லர் போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன. உட்புற அம்சங்களில் 7-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பவர்விண்டோ, கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ ஏசி, பின்புற சென்சார் உள்ளிட்டவை பயணிகளுக்கு வசதியான அனுபவத்தை வழங்குகின்றன.
பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை ஏர்பேக்குகள், ABS+EBD, வேக எச்சரிக்கை, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், பின்புற கேமரா போன்றவை முக்கிய இடம் பெறுகின்றன. இதன் விலை பற்றி நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராதாலும், இது ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையாக இருக்கலாம் என கசிவுகள் தெரிவிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்துடனும், மலிவான விலையுடனும் இது நடுத்தர வர்க்கத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.