புதுடில்லி: வாட்ஸ்அப்பில் பணப்பரிவர்த்தனைக்கு விரைவில் புதிய வசதி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கூகுள் பே, போன் பே போன்று வாட்ஸ்அப் சமூகவலைதளமும் பணப்பரிவர்த்தனை வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், குறைந்த அளவு பணப்பரிவர்த்தனைக்காக வாட்ஸ்அப் தற்போது UPI LITE என்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இதை தற்போது வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. பரிசோதனை முடிந்ததும் அது அறிமுகப்படுத்தப்படும். அது அமலுக்கு வந்தால், விரைந்து பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என கூறப்படுகிறது