ஒன்பிளஸ் நிறுவனம் இறுதியாக தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலான Nord CE 4 Lite 5G மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான Nord CE 3 Lite உடன் ஒப்பிடும் போது இது புதிய பாக்ஸி டிசைன் மற்றும் புதிய துடிப்பான கலர் ஆப்ஷன்களுடன் இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OxygenOS 14-ல் இயங்குகிறது. மேலும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,500mAh பேட்டரியுடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் Nord CE 4 Lite மொபைல் 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய 2 வேரியன்ட்ஸ்களில் வருகிறது. இவற்றின் விலைகள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.22,999 ஆகும். மெகா ப்ளூ, சூப்பர் சில்வர் மற்றும் அல்ட்ரா ஆரஞ்சு ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் இந்த ஃபோன் கிடைக்கும். வரும் ஜூன் 27 முதல் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட் வழியே இந்த மொபைல் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த மொபைல் 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட், 2,100 nits பீக் பிரைட்னஸ்,கொண்ட 6.67-இன்ச் ஃபுல் -HD+ AMOLED ஸ்கிரீனை கொண்டுள்ளது. இந்த மொபைலில் குவால்காம் நிறுவனத்தின் Snapdragon 695 5ஜி ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. இது 8GB LPDDR4X RAM மற்றும் 256GB வரையிலான UFS 2.2 ஆன்-போர்ட் ஸ்டாரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் Adreno 619 GPU கொடுக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை புதிய Nord CE 4 Lite 5G மொபைலானது ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொண்ட 1/1.95-இன்ச் 50-மெகாபிக்சல் Sony LYT-600 பிரைமரி சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளிட்டவை அடங்கிய டூயல் ரியர் கேமரா யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. செலஃபிக்களுக்காக 16MP சென்சார் உள்ளது, இது Electronic image stabilisation சப்போர்ட்டை கொண்டுள்ளது.
புதிய Nord CE 4 Lite 5G மொபைலானது 80W வயர்டு SuperVOOC மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் கொண்ட 5,500mAh பேட்டரி பேக்-ஐ கொண்டுள்ளது. மேலும் இந்த ஃபோன் 5G, Wi-Fi 5, GPS, ப்ளூடூத் 5.1 மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்கிறது. இந்த டிவைஸில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெஸ்டென்ஸிற்காக IP54 ரேட்டிங்கை இந்த மொபைல் கொண்டுள்ளது.