சியோமி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் தனது புதிய தயாரிப்பான Redmi 13 என்ற 5ஜி மொபைலை அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் முந்தைய மலிவு விலை 5ஜி மொபைலான Redmi 12-ன் வெற்றியை தொடர்ந்து தற்போது Redmi 13 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 ஏஇ (accelerated edition) ப்ராசஸருடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் முதல் மொபைல் இதுவாகும்.
இந்தியாவில் Redmi 13 5G மொபைலின் விலை:
இந்தியாவில் புதிய Redmi 13 5G மொபைலானது ஜூலை 12 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் 2 வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,499-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன் ஹவாய் ப்ளூ, பிளாக் டயமண்ட் மற்றும் ஆர்க்கிட் பிங்க் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
REDMI 13 5G மொபைலின் அம்சங்கள்…
ரெட்மி 13 5ஜி மொபைலானது ஐபிஎஸ் பேனல் மற்றும் ஃபுல் HD+ ரெசல்யூஷனுடன் கூடிய பெரிய 6.79 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட்டைக் கொண்டுள்ளது. இந்த ஃபோன் புதிய ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ ப்ராசஸரைக் கொண்டுள்ளது, இது அதிகபட்சமாக 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலின் முக்கிய வடிவமைப்பு சிறப்பம்சமாக பேனலில் டூயல் கிளாஸ் பேக் ஃபினிஷ் உள்ளது, இந்த டிசைனானது முந்தைய ரெட்மி ஃபோன்களில் நாம் பார்த்த பிளாஸ்டிக்கில் இருந்து பெரிய மாற்றம் கண்டுள்ளது. இந்த மொபைலின் மொத்த எடை 205 கிராம் ஆகும்.
டூயல் நானோ சிம் சப்போர்ட் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட சியோமியின் ஹைப்பர்ஓஎஸ்-ல் இயங்குகிறது. முக்கிய சிறப்பம்சமாக இந்த மொபைலின் பின்பக்கத்தில் சாம்சங்கின் ISOCELL HM6 சென்சார் மற்றும் தெளிவான படங்களுக்கான 9-in-1 பிக்சல் பின்னிங் டெக்னாலஜி கொண்ட 108MP கேமரா உள்ளது. கூடுதலாக, 2MP மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கம் செல்ஃபிக்களுக்காக 13MP செல்ஃபி ஷூட்டரை கொண்டுள்ளது. பின்புறத்தில் ஒரு ரிங் ஃபிளாஷ் உள்ளது. இந்த மொபைலோடு அப்டேட் செய்யப்பட்ட ஹைப்பர்ஓஎஸ் வெர்ஷனை யூஸர்கள் பெறுவார்கள். இந்த மொபைலுக்கு 2 வருட OS அப்கிரேட்ஸ் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5030mAh பேட்டரியை இந்த மொபைல் கொண்டுள்ளது. இந்த டிவைஸில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G LTE, டூயல் பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும்.