விவோவின் ஃபிளாக்ஷிப் எக்ஸ் சீரிஸ் பிரிவில் விரைவில் விவோ X200 ப்ரோ என்ற புதிய டிவைஸை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 9400 சிப்செட்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதன் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி பற்றிய அம்சங்களும் இணையதளத்தில் கசிந்துள்ளன.
X200 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1.5K பிக்சல்கள் ரெசொலூஷன் கொண்டுள்ளது மற்றும் வெண்ணிலா வண்ணத்தில் Vivo X200 வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விவோ X200 ப்ரோ ஆனது Vivo X100 Proஇன் விவரக்குறிப்புகளை விட மேம்படுத்தப்பட்டதாக இருக்கும். Weiboஇல் உள்ள டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் படி, வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் 1.5K பிக்சல்கள் ரெசொலூஷன் மற்றும் நேரோ பெசல்கள் கொண்ட 6.7-இன்ச் அல்லது 6.8-இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறலாம் என்று பதிவிட்டுள்ளது. இது சிங்கிள் பாயிண்ட் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிய சிலிக்கான் பேட்டரியைப் பெறலாம்,
மேலும் இது 6000mAh பேட்டரி திறனை வழங்கும். பெரிஸ்கோப் லென்ஸ் உட்பட இந்த போனில் மூன்று கேமராக்கள் வழங்கப்படும். விவோ X200 ப்ரோ ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 9400 சிப்செட் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவோ X சீரிஸ் டிவைஸிலும் இது எதிர்பார்க்கப்படுகிறது. விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி சேமிப்பு வகைகளில் ரூ.89,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது அஸ்டெராய்டு பிளாக் வண்ணத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ X100 ப்ரோ ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 9300 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது தூசி மற்றும் நீர் பாதுகாப்புக்கு IP-68 மதிப்பீடு கொண்டுள்ளது.
பேக் கேமராவில் Zeiss பிராண்டிங் உள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான FunTouch 14 மூலம் இயக்கப்படுகிறது. OIS உடன் கூடிய சூப்பர் டெலிஃபோட்டோ 50MP பேக் கேமரா கொண்டுள்ளது மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32MP ஃபிரண்ட் கேமரா கொண்டுள்ளது. விவோ X100 ப்ரோ ஆனது 5,400mAh பேட்டரியுடன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வெளியிடப்பட்டது.
விவோ X100 ப்ரோ விவரக்குறிப்புகளுடன் ஒப்பிடும்போது விவோ X200 ப்ரோ விவரக்குறிப்புகள் பல மேம்படுத்தல்களுடன் வரக்கூடும் என்பதைக் குறிக்கிறது. விவோ X200 ப்ரோ வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.