May 20, 2024

ககேசியன் ஷெப்பர்ட் இன செல்ல பிராணி… கோடிக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய தொழிலதிபர்

பெங்களூரு,

தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள் தங்கள் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்க விரும்புகிறார்கள். வீட்டில் செல்லப் பிராணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நாயை ரூ.10க்கு வாங்கி அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளார்.

இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும், பெங்களூருவில் உள்ள ‘கடபோம்ஸ் கென்னல்ஸ்’ நாய்க்கடையின் உரிமையாளருமான சதீஷ். அவர் ரூ. 20 கோடி கொடுத்து ‘ககேசியன் ஷெப்பர்ட்’ நாயை வாங்கினார். ஐதராபாத்தை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து இந்த நாயை சதீஷ் வாங்கியுள்ளார்.

நாய்க்கு இப்போது ஒன்றரை வயதுதான் ஆகிறது. சதீஷ் அந்த நாய்க்கு ‘கடபோம் ஹைதர்’ என்று பெயரிட்டுள்ளார். தைரியம் மற்றும் அச்சமின்மை கொண்ட இந்த நாய் பெரும்பாலும் ரஷ்யா, துருக்கி, சர்க்காசியா மற்றும் ஜார்ஜியாவில் காணப்படுகிறது. இந்தியாவில் இந்த வகை நாய்கள் கிடைப்பது மிகவும்
அரிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!