May 18, 2024

கொழுகொழு தொப்பையும் கடகடனு கரையும்…இதை தவிர்த்தல்…

உங்களுடைய உடலின் எடை அதிகமாக இருந்தால் அதனால் பல நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. நாம் சாப்பிடுவது எவ்வளவு முக்கியம்.. சாப்பிட்ட உணவை செரிக்க செய்வது, அந்த ஆற்றலை முழுமையாக பயன்படுத்துவது முக்கியம். தொப்பை வந்தால் கூடவே இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, பித்தப்பையில் கற்கள், சுவாசக் கோளாறு இதை விட கொடிய சில புற்று நோய்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

உடல் பருமனாக மாறுவது சாப்பாட்டினால் மட்டுமல்ல, கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற மன ரீதியான பிரச்சனைகளாலும் ஏற்படுகிறது. உடல் எடையை நாம் கட்டுக்குள் வைத்திருந்தால் எப்போதும் சுறுசுறுப்பாகவும் உடல் வலுவாகவும் இருப்போம். இதனால் மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து மன அழுத்தமும் குறையும். இதில் வினோதம் என்னவென்றால் உடல் எடை கூட நாம் விரைவில் குறைத்து விடலாம். ஆனால் தொப்பையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. தொப்பை கொழுப்பு என்றால் நமது அடிவயிறை சுற்றி இருக்கும் கொழுப்பு தான். இதில் இரண்டு வகைகள் கூட உள்ளன.

தொப்பை வகை 1: விஸ்செரல் என்றால் உள்ளுறு கொழுப்பு என்பார்கள். வயிற்றுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகள் வயிற்றில் அதிக இடத்தை ஆக்கிரமிப்பதால் உண்டாகக்கூடிய தொப்பை.

தொப்பை வகை 2: தோல்புறக் கொழுப்பு (தோலடி கொழுப்பு) என சொல்லப்படுவது தோலின் கீழ் உள்ள கொழுப்பு. தோலடியில் உள்ள கொழுப்பை விட உள்ளுறுப்பு கொழுப்பினால் வரும் தொப்பைதான் உடல் நலப்பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

தொப்பை கொண்டு வரும் நோய்கள்..

•இதய நோய்

•மாரடைப்பு

•உயர் இரத்த அழுத்தம்

•பக்கவாதம்

•டிமென்சியா

•டைப் 2 நீரழிவு நோய்

•ஆஸ்துமா

•மார்பக புற்றுநோய்

•பெருங்குடல் புற்றுநோய்.

 

தொப்பை கொழுப்பு எப்படி வருகிறது?

1) உணவு பழக்கம்

தவறான உணவுப் பழக்கம் கொண்டிருந்தால் தொப்பை வரும். அதாவது புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பதுதான் தொப்பைக்கு முதன்மையான காரணம். உதாரணமாக காய்கறிகள் அதிகமாகவும், சோறு குறைவாகவும் உண்ண வேண்டும். அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிடும் போது வளர்ச்சியை பாதிக்கிறது. துரித உணவு, பிஸ்கட் மற்ற பேக்கரி உணவுகள் தொப்பையை அதிகமாக்கும். அதை தவிர்க்க வேண்டும்.

2. உடற்பயிற்சி

உடல் பயிற்சி செய்யாமல் இருப்பது தொப்பை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நமது உடலில் உள்ள செயல்பாடுகள் குறைவாக இருக்கும் போது கொழுப்பு அதிகமாக உள்ளது. உடலுக்குத் தேவையான கலோரிகளை விட அதிகமான கல்லூரிகளை உட்கொள்வதாலும் தொப்பை பெருத்துக் கொண்டே செல்லும். அளவாக உண்ண வேண்டும்.

3. மது, புகைப்பழக்கம்

அதிகமாக மது அருந்தினால் வயிற்றை சுற்றி இருக்கும் எடை அதிகமாகும். புகைபிடித்தலும் தொப்பை கொழுப்பு கூட்ட ஒரு காரணமாகும்.

4. மன அழுத்தம்

கார்டிசோல் என்ற ஹார்மோன் நமது மன அழுத்தத்தில் அதிகமாக சுரக்கும். இதனால் வளர்ச்சியில் மாற்றம் பாதித்து, உடல் எடையும் அதிகரிக்கும். இது வயிற்றை சுற்றி அதிக கலோரிகள் படிய காரணம் ஆகும். மன அழுத்தம் கொண்டோர் அதிகமாக உணவு எடுத்து கொள்வதும் ஒரு காரணம்.

5. மரபியல்

உடல் பருமனாக இருப்பதற்கு மரபணுக்கள் கூட காரணமாக அமைகின்றன.

6. தூக்கமின்மை

நாம் குறைவாக தூங்கினால் அது நமது அன்றாட நாளில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிடும். உதாரணத்திற்கு சரியாக தூங்காதவர்களுக்கு பகலில் அதிகமாக பசி எடுக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இரவு நேர பணி செய்பவர்கள் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்வதில்லை இதனால் இவர்களுடைய வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பு ஏற்படுகிறது.

தொப்பை வருவதற்கான காரணங்களை இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள். இனி இந்த விஷயங்களை சரி செய்தால் நாளடைவில் தன்னாலே தொப்பை குறைந்து விடும் தினம்தோறும் 30 நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நன்கு தூங்க வேண்டும். மூன்று வேளையும் உணவை தவிர்க்காது சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் மாற்றத்தை உணருவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!