May 4, 2024

சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது ஏன்? ஸ்ருதிஹாசன் அதிரடி பதில்…

சினிமா,

சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டேர் வீரையா, பாலகிருஷ்ணா ஜோடியாக வீர சிம்ஹா ரெட்டி, பிரபாஸ் ஜோடியாக சலார் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

இதில், சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஜோடியாக அவர் நடித்த படங்கள் வரும் சங்கராந்திக்கு திரைக்கு வரவுள்ளது. ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது ஏன்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், நான் நடிப்புத் துறையில் சிறியவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை. வயது என்பது வெறும் எண். நடிப்புத் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் யாருடனும் நடிக்கலாம். அதுமட்டுமல்லாமல், இரு மடங்கு வயதான நடிகைகளை வயதான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ப்பது புதிதல்ல.

இது சினிமாவில் காலம் காலமாக நடந்து வருகிறது. இதற்கு நான் விதிவிலக்கல்ல. அப்படிப்பட்ட ஹீரோக்களுக்கு சம்பளம் அதிக கிடைக்கும் என்பதால் அவர்களுடன் நடிக்கிறேன் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் எனக்கு எல்லா படங்களுக்கும் ஒரே சம்பளம்தான். இளம் ஹீரோ, பழைய ஹீரோ என்று நான் வித்தியாசம் பார்ப்பதில்லை என்கிறார் ரூடிஹாசன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!