May 18, 2024

உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா… ஆஸ்திரேலிய அணி பிரான்சை வீழ்த்தி அபார வெற்றி

புவனேஸ்வர்,

பதினைந்தாவது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இன்று முதல் 29-ந்தேதி வரை நடைபெறவிருக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, ‘டி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும்.

முதல் நாளான இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பகல் 1 மணிக்கு தொடங்கிய அர்ஜென்டினா- தென்ஆப்பிரிக்கா போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அதைத்தொடர்ந்து மதியம் 3 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 8-0 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!