
மாஸ்கோ: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவை சந்தித்து, ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

சமீபத்தில் அமெரிக்கா விதித்த கூடுதல் வரி நடவடிக்கைக்கு பின்னர், அஜித் தோவால் ரஷ்யா சென்றிருந்தார். அவர் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலர் செர்ஜி ஷோய்குவுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசியிருந்தார்.
இந்த சந்திப்பில், ராணுவ தொழில்நுட்பம் மட்டுமின்றி சிவில் விமானங்கள், உலோகம், வேதியியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் வழிகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தியா–ரஷ்யா உறவை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி சார்பில் புடினுக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. புடினும் அதை ஏற்று வர சம்மதித்துள்ளார்.