மழைக்காலம் இயற்கையின் அழகை ரசிக்க சிறந்த பருவமாக இருந்தாலும், இதே நேரத்தில் சில சவால்களையும் ஏற்படுத்தும். கனமழை, மின்னல், காற்று மற்றும் வெள்ளம் போன்ற நிகழ்வுகள் பயணத்தை கடுமையாக்கும். குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருப்பின் கூடுதல் முன்னெச்சரிக்கைகள் அவசியம்.

பயணத்திற்குப் புறப்படும் முன் வானிலை அறிவிப்புகளை சரிபார்க்க வேண்டும். மழை எச்சரிக்கைகள் இருந்தால், திட்டங்களை மாற்றுவது பாதுகாப்பானது. பேக்கிங் செய்யும் போது மழைக்கோட்டு, குடை, பிளாஸ்டிக் மூடிகள், விரைவாக உலரக்கூடிய துணிகள் போன்றவை உடனே எடுத்துச் செல்ல வேண்டும். மின்னணு சாதனங்களை பாதுகாக்க ஜிப்-லாக் பைகளை பயன்படுத்தலாம்.
சுகாதாரத்திற்காக சானிடைசர், கொசு விரட்டி, குடிநீர் பாட்டில்கள் அவசியம். தெரு உணவை தவிர்த்து, சுத்தமான சுடுநீர் மட்டும் பருக வேண்டும். வாகனத்தில் பயணிக்கும்போது மெதுவாகவும் கவனமாகவும் ஓட்ட வேண்டும். காரில் முதலுதவி பெட்டி, டார்ச், பவர் பேங்க், ரேன்கோட் போன்றவை இருக்க வேண்டும். தங்கும் இடத்தை வெள்ளம், நிலச்சரிவு ஏற்படாத பகுதிகளில் தேர்வு செய்ய வேண்டும்.
மலைப்பாங்கான இடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கவனிக்க வேண்டும். நேர தாமதம் ஏற்படும் என்பதால் சிறிது கூடுதல் நேரத்துடன் திட்டமிடுவது சிறந்தது. குழந்தைகளுக்காக புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள், ஹெட்போன்கள் போன்றவை எடுத்துச் செல்லலாம். நீர்நிலைகள் அருகில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணத் திட்டங்களை நெருங்கிய உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவசர உதவிக்கான தொடர்பு எண்கள், மருத்துவப் பட்டியல் ஆகியவையும் வைத்திருக்க வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துக் கொண்டால் உங்கள் மழைக்கால பயணம் மகிழ்வானதும், பாதுகாப்பானதும் அமையும்.