தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதன் காரணமாக, தெற்கு ரயில்வே சார்பாக கோடை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரையில் இருந்து பாகத் கி கோதி செல்லும் சிறப்பு ரயில், ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10:45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், எலும்பூர், நெல்லூர், விஜயவாடா வழியாக பாகத் கி கோதி சென்று சேரும் .
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாகத் கி கோதி செல்லும் சிறப்பு ரயில், ஏப்ரல் 20ஆம் தேதி இரவு 7:45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா வழியாக பாகத் கி கோதி சென்று சேரும் .
திருநெல்வேலியில் இருந்து நிஜாமுதீன் செல்லும் சிறப்பு ரயில், ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 10:15 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, எக்மோர், விஜயவாடா வழியாக நிஜாமுதீன் சென்று சேரும் .
இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன. பயணிகள் தங்கள் பயணத் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
கோடை சிறப்பு ரயில்கள், மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க உதவும். பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை முன்னிட்டு, முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.