சென்னை: பழங்கால சிறப்புகள்…ரோமானிய நகரம் என்றாலே நாம் அனைவருக்கும் மனதில் தோன்றுவது அதன் பண்டையகால சிறப்புகள் தான். அந்த சிறப்பின் காரணமாக தான், இன்றும் உலகின் முன்னணி சுற்றுலா தளமாக திகழ்கிறது ரோமானிய நகரம். ரோமானிய ஆட்சியாளர்கள் தங்கள் உணவில் தினமும் விஷம் கலந்து உண்டனர். வலுக்கட்டாயமாகவோ அல்லது வஞ்சகத்தாலோ எதிரிகளால் விஷம் குடிக்க நேர்ந்தால், விஷத்திற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தனர்.
ரோமானிய பேரரசர்களுக்கு பல வலிமையான எதிரிகள் இருந்தனர், அவர்கள் ரோமானிய பேரரசர்களின் எல்லைகளை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு பெரிதும் தடையாக இருந்தனர். பெர்சிய பேரரசானது ரோமானியர்களின் மிக மோசமான எதிரியாக கருதப்பட்டனர். அவ்விரு பேரரசுகளும் சுமார் 721 ஆண்டுகள் போரிட்டனர் என்கிறது வரலாறு. ரோமானிய பிரதேசங்கள் பூமியில் 12 சதவீதம் மட்டுமே இருந்தன; இதன் மூலம்,ரோமானிய பேரரசு உலகின் 28 வது பெரிய பேரரசாக விளங்கியது. உண்மையில், உலகிலேயே பிரிட்டிஷ் பேரரசே மிகப்பெரிய பேரரசாக திகழ்ந்தது.
சனி பகவானை தெய்வமாக வழிபடும் இந்திய பாரம்பரியத்துடன் ரோமானியர்களுக்கு குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருந்தன. இந்திய ஜோதிடம் மற்றும் பிற பண்டைய நூல்களின்படி, சனிக் கடவுளானவர் அடிமைகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் சமுதாயத்திற்க்காக பிற ஊழியம் செய்கின்ற மக்கள் அனைவருக்கும் தலைமைக் கடவுளாக விளங்குகிறார். ஊழியர்களிடமும், தொழிலாளர்களிடமும் இரக்கமற்றவராக நடந்து கொள்வது சனி பகவானின் கோபத்தை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.
அதேபோல், ரோமானியர்கள் சனி கடவுளைக் கொண்டாடுவதற்கும், சமாதானப்படுத்துவதற்கும் சாட்டர்னலியா என்ற திருவிழாவைக் கொண்டாடினர். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக எஜமானர்கள் அடிமைகளாகவும் மற்றும் அடிமைகள் எஜமானர்களாகவும் பாத்திரங்களை மாற்றிக் கொள்ளும் பாரம்பரியம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
இனப்பெருக்கம் பற்றி ரோமானியர்களுக்கு மிகவும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சிற்றின்பங்களில் ஈடுபட்டிருந்தாலும், மக்கள் தொகை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காக முட்டாள்தனமான பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் விதித்தனர். பிறப்பு கட்டுப்பாட்டுக்காக அவர்கள் ஒரு மூலிகையை பயன்படுத்தினார்கள்! இருப்பினும், ரோமானியர்கள் இந்த மூலிகையை மிகவும் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தியதால், அந்த மூலிகையானது தற்போது முற்றிலும் அழிவடைந்துவிட்டது.