நம் அனைவருக்கும் பணத்தை பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் எந்த திட்டம் சரியானது என்பதைத் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படும். இதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தபால் நிலைய (Post Office) சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதாகும். இத்திட்டங்கள் அனைத்தும் அரசாங்க உத்தரவாதத்துடன் கூடியவை என்பதால், முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளிக்கின்றன.

இந்தத் திட்டங்கள் நிலையான வருமானத்தை வழங்குகின்றன. குறிப்பாக, நிதி இழப்பு அபாயம் இல்லாமல், பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தபால் நிலைய RD (Recurring Deposit) திட்டமாகும். ஊழியர்களும் சிறு முதலீட்டாளர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
இந்த RD திட்டம் ஐந்து வருட வைப்புத் திட்டமாகும். இதில் மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை செலுத்த வேண்டும். தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7% ஆகும். உதாரணமாக, ஒருவர் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.4,000 முதலீடு செய்தால், மொத்த முதலீடு ரூ.48,000 ஆகும். திட்டம் முதிர்வடைந்தபோது, முதலீடு + வட்டி சேர்த்து ரூ.45,459 வருமானம் கிடைக்கும்.
இந்தத் திட்டம் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால், சந்தை அபாயங்கள் எதுவும் இல்லை. பாதுகாப்பான முதலீட்டைத் தேடுபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். மேலும், மாதந்தோறும் சேமிக்கக் கூடிய பழக்கத்தையும் உருவாக்கும். எனவே, பாதுகாப்பான சேமிப்பும் நிச்சயமான வருமானமும் விரும்புவோருக்கு இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் சிறந்த தேர்வாகும்.