தமிழகத்தில் 2025-26 நிதியாண்டில் விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட முன்னுரிமை துறைகளுக்கு 9.37 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க வாய்ப்புள்ளதாக நபார்டு தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் நடந்த மாநில கடன் கருத்தரங்கத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் முருகானந்தம், நிதி துறை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் “வளம் சார்ந்த மாநில அறிக்கை 2025-26” வெளியிடப்பட்டது. நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் ஆனந்த் கூறியதாவது. கடந்த நிதியாண்டை விட 12.41% அதிகமாக கடன் வழங்க வாய்ப்பு உள்ளது.
விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த துறைக்கு 4.34 லட்சம் கோடி, சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு 3.45 லட்சம் கோடி, கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு 1.58 லட்சம் கோடி ரூபாய் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழக அரசு இந்த கடன்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப, மாநில அரசு தனது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யும். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கடன் வழங்கும் முறையில் நீக்கம், சரியான பயன்பாடு ஆகியவை உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.