புதுடெல்லி: கடந்த ஓராண்டாக டீசலின் தேவை குறைந்திருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் லாரிகள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கு மொத்தம் 76.40 லட்சம் டன் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் முதற்கட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு அக்டோபரில் இருந்த அளவிலேயே நுகர்வு இருந்தது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக உள்ள இந்தியா, 10 பீப்பாய்களில் 4 டீசலை இறக்குமதி செய்கிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் முன்னாள் இயக்குனர் ராமச்சந்திரன் கூறியதாவது: நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் பொருட்களின் நுகர்வு எதிர்பார்த்த அளவு அதிகரிக்காததால், சரக்கு போக்குவரத்துக்கான டீசல் தேவையும் அதிகரிக்கவில்லை.
மேலும், இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால், விவசாய தொழிலில் மாற்றம் ஏற்பட்டு, டீசல் தேவையில் எதிரொலித்துள்ளதாகவும் அவர் கூறினார்.