கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில், இன்று திடீரென சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது குறிப்பாக மும்பை பங்குச்சந்தை 505 புள்ளிகளை இழந்து 79 ஆயிரத்து 545 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதையடுத்து சென்செக்ஸ் மீண்டும் 80 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 121 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 190 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்றைய பங்குச்சந்தையில் பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் ஏற்றமும், ஏசியன் பெயின்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிவைச் சந்தித்துள்ளன.