புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதால் தேசிய பங்குச்சந்தையிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாடுகளை சேர்ந்த பொருட்களுக்கு பரஸ்பரம் வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்ப டும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் ரூ.11 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடை பெற்று உள்ளது. இந்தியாவில் உள்ள விவசாய பொருட்கள் மற்றும் அரிசி, இறால், தேன், காய்கறி ஜூஸ், ஆமணக்கு எண்ணை, மிளகு உள்ளிட்ட பல பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விவசாய பொருட்கள் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரத்தின கற்கள், நகைகள், வாகனங்கள், உணவு பொருட்கள் ஆகியவை ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டு உள்ளதால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள், பருப்பு வகைகள் ஆகியவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இந்தியாவில் 52 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக டிரம்ப் ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இந்திய பொருட்க ளுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருப்பது இந்தியாவில் பங்கு வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய விட 805 புள்ளிகள் சரிந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 75,653 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டியும் சரிவோடு தொடங்கியது.
வங்கிகள், ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட் கள், நிதி சேவைகள் சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. இந்தி யாவில் இருந்து எந்தெந்த பொருட்கள் அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறதோ அந்தந்த பொருட் களை தயாரிக்கும் நிறுவ னங்கள் பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்து உள்ளன.