மே 1ஆம் தேதி முதல் ATM பரிவர்த்தனைகள் தொடர்பான கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதால், அடிக்கடி ATM பயன்படுத்தும் நபர்கள் கூடுதல் கட்டணங்களை செலுத்தும் நிலைக்கு வர நேரிடும். இந்திய ரிசர்வ் வங்கி ATM பரிவர்த்தனை கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கியின் ATM மூலமாக பணம் எடுப்பதற்கான கட்டணம் தற்போது ரூ.17 இருந்தது. இது ரூ.2 அதிகரிக்கப்பட்டு ரூ.19-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே வங்கியின் ATM கார்டைப் பயன்படுத்தி இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையைத் தாண்டி பணம் எடுக்கும்போது, கட்டணம் ரூ.21-ல் இருந்து ரூ.23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு, சொந்த வங்கி ATM-ல் மாதத்தில் 5 இலவச பரிவர்த்தனைகள் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மெட்ரோ நகரங்களில் பிற வங்கியின் ATM-ல் 3 முறை இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறை இலவச பரிவர்த்தனைகள் செய்ய அனுமதி உள்ளது.
இவை தவிர, பணம் எடுப்பது மட்டுமல்லாமல், இருப்பு சோதித்தல் மற்றும் மினி ஸ்டேட்மென்ட் பெறுவது போன்றவற்றும் பரிவர்த்தனையாகக் கருதப்படும். இதற்கான கட்டணமும் ரூ.6-ல் இருந்து ரூ.7-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ATM பயன்படுத்தும் நபர்கள், இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு அவர்களின் பரிவர்த்தனைகளை திட்டமிட்டு செய்ய வேண்டும்.