இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து பல முக்கிய வங்கிகள் தங்கள் ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்துள்ளன. இதனால் நிலையான வருமானத்திற்காக FD-யை சார்ந்திருக்கும் முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வட்டி குறைப்பால், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஃபெடரல் மற்றும் யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியை வழங்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்ற வங்கிகளைவிட உயர்ந்த வட்டி வழங்கி கவனம் ஈர்த்துள்ளது. மே 5, 2025 நிலவரப்படி, இந்த வங்கி வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 4% முதல் 8.25% வரையும் FD வட்டியை வழங்குகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு ரூ.3 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கு 4.5% முதல் 8.75% வரை வட்டி வழங்குகிறது.
குறிப்பாக, 2 முதல் 3 ஆண்டுகளுக்கிடையிலான FD-க்கு 8.75% என்ற அதிகபட்ச வட்டி கிடைக்கிறது.இது மூத்த குடிமக்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. முதலீடு செய்ய விரும்பும்வர்கள் FD முழுமையடையும் காலத்திற்கு முன்பு பணத்தை திரும்ப பெற்றால் 1% அபராதம் விதிக்கப்படும். ஆனால் டெபாசிட் செய்த 7 நாட்களுக்குள் பணம் திரும்பப் பெற்றால் எந்த அபராதமும் கிடையாது.
சிறிய நிதி வங்கிகள் புதியவையாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன மற்றும் ₹5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு இன்ஷூரன்ஸ் பாதுகாப்பும் உள்ளது. இது போன்ற வங்கிகள் பெரிய வங்கிகளை விட FD-க்கு உயர்ந்த வட்டியை வழங்குவதால் மாற்று வாய்ப்புகளை தேடும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம்.உத்கர்ஷ் பேங்க் போன்ற சிறிய நிதி வங்கிகள் புதிய முதலீட்டுக்கு ஏற்ற இடமாக மாறுகின்றன. பாதுகாப்பான வருமானத்தை நாடும் முதியோர் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். FD வட்டி வீழ்ச்சியிலும், இந்த வங்கி உயர் வட்டி வழங்கி நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.