ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த மாற்றம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-25 நிதியாண்டு இன்றுடன் முடிவடைவதால் கணக்குகளை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோருக்கு வசதியாகவும், சீரான நிதி பரிவர்த்தனைகளை உறுதி செய்யவும் நடப்பு நிதியாண்டின் கடைசி நாளில் வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசு ரசீதுகள் மற்றும் நிதிகளைக் கையாளும் வங்கிகள் வழக்கமான செயல்பாட்டு நேரங்களில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், வருமான வரி தொடர்பான பணிகள் தடையின்றி தொடரும் என்றும், நாடு முழுவதும் வருமான வரித் துறை அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.