பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆகஸ்ட் 1, 2025 முதல் சுதந்திர தினத்தையொட்டி ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ரூ.1-க்கு ஒரு மாதத்திற்கு பிஎஸ்என்எல்-ன் மேட்-இன்-இந்தியா 4ஜி சேவையை சோதித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் அடங்கும்.

இந்த முயற்சி, ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்தை பொதுமக்கள் இலவசமாக அனுபவிக்க வழி வகுக்கிறது. நாடு முழுவதும் 1,00,000 4ஜி தளங்களை நிறுவும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த சலுகையைப் பெற, அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சிறப்பு மேளா இடங்களுக்கு சென்று பதிவு செய்யலாம். பிஎஸ்என்எல், இந்த உள்நாட்டு நெட்வொர்க்கின் வித்தியாசத்தை வாடிக்கையாளர்கள் உணர்வார்கள் என நம்புகிறது.