சென்னை:
பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களுக்கு 72,300 சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு 2,000 கோடி ரூபாய் செலவுடன் 100 சதவீத வரை மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் போன்ற இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க முழுமையான மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக கூட்ட நெரிசல் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், சுங்கச் சாவடிகள் போன்ற இடங்களில் 80 சதவீத மானியம் வழங்கப்படும். பொருட்கள் வாங்கும் செலவுக்கும் 70 சதவீத மானியம் கிடைக்கும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், விரைவுச் சாலைகள் மற்றும் சாலையோரங்களில் நிலையங்களை அமைக்கும் திட்டத்துக்கும் 80 சதவீத மானியம் வழங்கப்படுவதுடன், இதற்காக நாட்டிற்கு மொத்தம் 2,000 கோடி செலவாகும் என திட்ட கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.