சென்னை: சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.16 அதிகரித்து ரூ. 1,980.50-க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது.