இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துதல் அதிகரித்து வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு, தேசிய நுகர்வோர் தகராறுகள் நிவர்த்தி ஆணையம் (NCDRC) கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டியை ஆண்டுக்கு 30 சதவீதத்திற்கு மேல் வசூலிக்க முடியாது என்று உத்தரவு அளித்திருந்தது.
ஆனால், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், சிட்டி வங்கிகள், எச்எஸ்பிசி மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற வங்கிகள் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை தடை செய்துள்ளதால், வங்கிகள் தற்போது சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வட்டி விகிதங்களை மாற்ற முடியும்.
இதன் மூலம் கிரெடிட் கார்டு பயனாளர்கள் 30% க்கும் மேல் வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு வரலாம். இதனால், கிரெடிட் கார்டு பயன்பாட்டை கவனமாக கவனித்து, நேரத்தில் கடன் செலுத்துவது அவசியமாகிறது. நிபுணர்கள், கிரெடிட் கார்டின் வட்டி விதிமுறைகளைப் புரிந்து கொண்டு, பணம் திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.