By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தங்கம் விலையில் வீழ்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > வர்த்தகம் > தங்கம் விலையில் வீழ்ச்சி
வர்த்தகம்

தங்கம் விலையில் வீழ்ச்சி

admin
Last updated: May 1, 2025 7:37 pm
By admin 2 Min Read
Share
SHARE

சென்னை: கடந்த ஏப்ரல் 22ம் தேதி 10 பவுன் தங்கம் வாங்கியவர்கள், வெறும் 10 நாட்கள் தாமதமாக இன்று வாங்கியிருந்தால் குறைந்தது ரூ.40,000 முதல் ரூ.45,000 வரையிலான லாபத்தை பெற்றிருப்பார்கள். நேற்று நடந்த அட்சய திருதியை தினத்தில் பலர் உற்சாகமாக தங்கம் வாங்கினர். ஆனால் அவர்கள் இன்று தங்கம் வாங்கியிருந்தால் சவரனுக்கு ரூ.1,640 முதல் ரூ.2,000 வரை கூடுதல் லாபம் கிடைத்திருக்கும்.

ஏனெனில், செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி போன்ற கட்டணங்களும் கணக்கில் எடுத்தால், இன்று தங்கம் வாங்கியவர்களுக்கு ஏறத்தாழ ஓரளவு லாபமாகவே இருக்கும். அட்சய திருதியை தினமான நேற்று, சென்னையில் உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் பெரிதாகவே காணப்பட்டது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை கடைகள் திறந்திருப்பதுடன், சலுகைகளும் குவிந்திருந்ததால் வாடிக்கையாளர்கள் வரிசையாக நுழைந்தனர்.

அன்று காலை விட மாலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.71,840 ஆக இருந்தது. வெள்ளி கிராம் ரூ.111 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,11,000 ஆகவும் விற்பனையாகியது. ஆனால், கடந்த ஆண்டின் அட்சய திருதியை நாளில் சவரனுக்கு ரூ.54,160 என்ற விலைக்கே தங்கம் விற்பனையாகியிருந்தது. அதன்படி, ஒரு ஆண்டுக்குள் ஒரு பவுனுக்கு ரூ.18,000 வரையிலான லாபம் கிடைத்திருக்கிறது.

10 பவுன் தங்கம் வாங்கியிருந்தால் ரூ.1,80,000 வரையில் லாபம் வந்திருக்கும். அதே நேரத்தில், கடந்த 10 நாட்களைக் கணக்கில் எடுத்தால், நேற்று தங்கத்தின் விலை ஓரளவு குறைந்ததாக இருந்தது. ஆனால் இன்று, அதைவிட மேலும் குறைவாக உள்ளது.

ஏப்ரல் 22ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9,290 ஆகவும், சவரன் ரூ.74,320 ஆகவும் இருந்தது. இன்று மே 1ம் தேதி, கிராம் ரூ.8,775 ஆகவும், சவரன் ரூ.70,200 ஆகவும் குறைந்துள்ளது. இதனால், நேற்றுடன் ஒப்பிடும்போது, சவரனுக்கு ரூ.1,640 குறைவாக விலை காணப்படுகிறது.

ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரங்களும் குறைவாக இருக்கும் என்பதால், இன்று நகை வாங்கியவர்கள் கொஞ்சம் லாபத்தில் இருக்கலாம். கடந்த ஜூலை மாதத்தில் நகைக்கான இறக்குமதி வரியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்தபோது, ஒரு சவரன் தங்கம் ரூ.51,000 வரை குறைந்திருந்தது.

அந்த நேரத்தில் 10 பவுன் வாங்கியிருந்தால், இப்போது ரூ.2 லட்சம் வரையிலான லாபம் கிடைத்திருக்கும். வெறும் ஒரு ஆண்டில் இவ்வளவு லாபம் தரும் முதலீடு எதுவும் இல்லை என்பது ஒரு சிந்தனைக்குரிய விடயம்.

தங்கம், ரியல் எஸ்டேட்டுக்குப் பிறகு அதிகரிக்கும் முதலீடு வாய்ப்புகளில் முக்கியமானதாகவும், நம்பகமான லாபம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் அட்சய திருதியை நாளில் சுமார் ரூ.14,000 கோடி மதிப்பில் தங்கம் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You Might Also Like

வாரத் தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

பொள்ளாச்சியில் ரூ.100 கோடி மதிப்பில் தென்னை நார் ஏற்றுமதி பாதிப்பு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது

போர் பதற்றம் எதிரொலியால் கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

TAGGED:diamondgoldGSTsilverஅட்சய திருதியைகூடுதல் லாபம்தங்கம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?