சீனியர் சிட்டிசன்கள் தங்களின் சேமிப்புகளை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதற்கான முக்கியமான தேர்வாக ஃபிக்சட் டெபாசிட் இருந்து வருகிறது. சாதாரண மக்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு சற்று அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் நிச்சயமான வருமானத்தையும் நம்பகத்தன்மையையும் பெறுகின்றனர். வங்கிகளின் விதிமுறைகள் மற்றும் கால அவகாசத்தைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன.

அரசு வங்கிகளைப் பார்க்கும்போது எஸ்பிஐ 1 ஆண்டு திட்டத்தில் 6.75 சதவீதம், 3 ஆண்டு திட்டத்தில் 7.80 சதவீதம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தில் 7.05 சதவீதம் வழங்குகிறது. பேங்க் ஆஃப் பரோடா 7 சதவீத வட்டி விகிதத்தை அனைத்து காலத்திற்கும் வழங்கி வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 1 ஆண்டு திட்டத்தில் 6.90 சதவீதம், 3 ஆண்டு திட்டத்தில் 7 சதவீதம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தில் 6.80 சதவீதத்தை வழங்குகிறது. கனரா வங்கியில் 1, 3 மற்றும் 5 ஆண்டு திட்டங்களுக்கு 6.75 சதவீதம் வட்டி கிடைக்கிறது.
தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி 1 ஆண்டு திட்டத்தில் 6.75 சதவீதம் மற்றும் 3, 5 ஆண்டு திட்டங்களில் 7.10 சதவீதம் வட்டி வழங்குகிறது. எச்டிஎப்சி வங்கியில் 1 ஆண்டு திட்டத்தில் 6.75 சதவீதம், 3 ஆண்டு திட்டத்தில் 6.95 சதவீதம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தில் 6.90 சதவீதம் வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கியில் 1 ஆண்டு திட்டத்தில் 6.75 சதவீதம், 3 ஆண்டு திட்டத்தில் 7.10 சதவீதம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தில் 7.35 சதவீதம் வழங்கப்படுகிறது. இதனால் அதிக Returns விரும்புவோருக்கு தனியார் வங்கிகள் சிறந்த விருப்பமாக இருக்கின்றன.
மொத்தத்தில், குறுகிய கால முதலீட்டில் அரசு வங்கிகள் பாதுகாப்பான தேர்வாகும். நீண்டகாலத்தில் அதிக வட்டி விகிதம் தேவைப்படுவோருக்கு ஆக்சிஸ் வங்கி 7.35 சதவீதம் வழங்குவதால் முன்னிலை வகிக்கிறது. நம்பகத்தன்மை, வட்டி விகிதம் மற்றும் முதலீட்டு பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனியர் சிட்டிசன்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப சரியான வங்கியைத் தேர்வு செய்வது மிக முக்கியம்.