பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனை செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்குகிறது. பிளஸ் மற்றும் பிளாக் மெம்பர்ஸ்களுக்கு 24 மணி நேரம் முன்கூட்டியே அக்சஸ் கிடைக்கும். வழக்கம்போல ஸ்மார்ட்ஃபோன்கள் முதல் வீட்டு உபகரணங்கள்வரை அதிரடி தள்ளுபடிகள் காத்திருக்கின்றன.

இந்த ஆண்டு முக்கியமாக 4K QLED ஸ்மார்ட் டிவிகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விற்பனையின்போது ரூ.20,000-க்கும் குறைவான விலையில் பிரீமியம் QLED டிவிகளை வாங்க முடியும். Xiaomi, Realme, Infinix, Thomson, Blaupunkt, Kodak மற்றும் Coocaa போன்ற பிராண்டுகள் சிறந்த விலையில் கிடைக்கின்றன.
எடுத்துக்காட்டாக, Xiaomi 32-இன்ச் QLED Google TV வெறும் ரூ.10,499-க்கு, Realme 43-இன்ச் QLED Ultra HD 4K ரூ.19,999-க்கு, Infinix 43-இன்ச் QLED 4K ரூ.14,299-க்கு மற்றும் Thomson 50-இன்ச் QLED Smart TV ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் Kodak 43-இன்ச் QLED TV ரூ.16,999 மற்றும் Blaupunkt OLED 40-இன்ச் ரூ.14,999-க்கு கிடைக்கும்.
வாங்கும் முன் விலை மற்றும் வங்கி சலுகைகளை சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த விற்பனை, புதிய டிவி வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.