வைரத்திற்கான தேவை அதிகரித்ததால், இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டு அக்டோபரில் 9.18 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம், மொத்த ஏற்றுமதி, 25,194 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளதாக, ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த ஏற்றுமதி ரூ.22,857 கோடியாக இருந்தது. மேலும், பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 11.32 சதவீதம் அதிகரித்து ரூ.11,796 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.10,495 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு ரூ.8,603 கோடியாக இருந்த தங்க நகை ஏற்றுமதி 8.80 சதவீதம் அதிகரித்து ரூ.9,450 கோடியாக உள்ளது. மேலும் பாலிஷ் செய்யப்பட்ட செயற்கை வைரங்களின் ஏற்றுமதியில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டு, 1.27 சதவீதம் அதிகரித்து ரூ.1,161 கோடியாக இருந்தது.