சென்னை :தங்கத்தின் விலை உயர்வதால் விற்பனை சரிவடைந்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக அதன் விற்பனை 20% சரிவை சந்தித்துள்ளது.
கடந்த ஜன.1ம் தேதி ரூ.57,200 ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது ஒரு சவரனுக்கு ரூ.6,240 அதிகரித்துள்ளது. குறுகிய காலத்தில் நடந்த இந்த விலை உயர்வு சில்லறை வர்த்தகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் மக்கள் மத்தியில் தங்கத்தை வாங்க வேண்டும் என்ற ஆர்வமும் குறைந்து வருகிறது.